சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 16 திசம்பர் 2016: அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது
- 13 அக்டோபர் 2016: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
- 2 சூன் 2015: சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்
- 9 ஏப்பிரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
செவ்வாய், சூன் 2, 2015
சீனாவிலுள்ள யாங்சி ஆற்றில் உல்லாச படகு சவாரி செய்ய 456 பேர் ஈசுடர்ன் இசுடார் (Eastern Star) என்ற கப்பலில் பயணித்த போது குபாய் மாகாணத்தின் சியான்லி கவுண்டியிலுள்ள யாங்சி ஆற்றில் அது கவிழ்ந்ததில் அனைவரும் மூழ்கினர்.
இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கப்பலின் தலைவரும் தலைமை பொறியாளரும் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கப்பல் எச்சரிக்கை சமைக்கையை அனுப்பவில்லை என்றும் அது புயலில் சிக்கி மூழ்கியது என்றும் தெரிவித்தனர். இரவு முழுவதும் மீட்புப்பணி மோசமான வானிலை நிலவிய போதும் தொடர்ந்தது. மீட்டுப்பணியில் 150 படகுகளும் 4,000 ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் 405 சீன சுற்றுலா பயணிகளும் 46 கப்பலின் ஊழியர்களும் 5 சுற்றுலா முகவர்களும் பயணித்தனர்.
முதலில் இவ்விபத்தில் 15 மீட்கப்பட்டதாகவும் 458 பேர் (406 சீன சுற்றுலா பயணிகள், 47 கப்பலின் ஊழியர்கள் & 5 சுற்றுலா முகவர்கள்) இக்கப்பலில் பயணம் செய்ததாகவும் சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் சின்குவா தெரிவித்தது.
கப்பல் சில நிமிடங்களில் மூழ்கியதாக படகின் தலைவன் தெரிவித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்தன. இதில் பயணம் செய்தவர்கள் 50-80 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இப்கப்பல் கிழக்கில் உள்ள நகரமான நான்சிங்கிலிருந்து தென் மேற்கிலுள்ள சோங்குயிங் வரை 1,500 கிமீ அனைவரும் இப்படகில் பயணம் செய்ய திட்டமிட்டுருந்தார்கள். கப்பல் யாங்கி ஆற்றின் நீர்வழியான டாமாசு அருகே மூழ்கியது. அருகிலுள்ள நகரம் சியான்லி.
மீட்புப்பணிக்காக மூன்று பள்ளத்தாக்கு அணையிலிருந்து நீர் குறைவாக திறக்கப்பட்டுள்ளது. சீன பிரதமர் லி விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளார். 1994ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கப்பல் 76 மீட்டர் நீளமும் 2,200 டன் எடையும் உள்ளது, அதிகபட்சமாக 534பேரை சுமந்து செல்லக்கூடியது.
உள்ளூர் நேரம் 21.30 மணிக்கு இப்கப்பல் மூழ்கியது. (ஒ.ச.நே 13.30) மீட்புப்புக் குழுவினர் படகு மூழ்கி இரண்டரை மணி நேரம் கழித்தே அவ்விடத்துக்கு வந்து தேடுதலை தொடங்கினர். சாங்காய் நகரிலுள்ள சிகி சுற்றுலா முகமை மூலமா பயணம் செய்தவர்களில் பெரும்பாலோரை அனுப்பியிருந்தது.
மூலம்
[தொகு]- [www.bbc.com/news/world-asia-china-32969861 Chinese ship capsizes on Yangtze with hundreds missing] பிபிசி, 2015 யூன் 02
- On China’s Yangtze River, a Race Against Time to Find Survivors நியுயார்க் டைம்சு , 2015 யூன் 02
- Prioritize saving lives, premier tells Yangtze rescuers சின்குவா, 2015 யூன் 02