சுதந்திர இசுக்காட்லாந்தை எதிர்க்கும் வணிக நிறுவனங்களுக்கு தேசியவாதிகள் எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்தெம்பர் 13, 2014

சுதந்திர இசுக்காட்லாந்துக்கான வாக்கெடுப்பு நெருங்கும் வேளையில், இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்தால் அது வருத்தத்திற்குரியது எனக் கூறியதால் பிரிட்டிசு பெட்ரோலியம் தண்டனைக்குள்ளாகும் என மூத்த இசுக்காட்லாந்து தேசியவாதி எச்சரித்துள்ளார்.


ஐக்கிய இராச்சியத்தின் முடிவு தேசியவாதிகளுக்கும் ஐக்கியவாதிகளுக்கும் நெருக்கமான முடிவை தரும் என்ற இருக்கும் நிலையில் இசுக்காட்லாந்து பிரிந்தால் அது பொருளாதார, நிதி நிலையில் கடும் சரிவை சந்திக்கும் என ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரூன் வணிக முதலாளிகளை கொண்டு அச்சப்படுத்தும் பரப்புரையில் ஈடுபடுகிறார் என்று தேசியவாதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.


தேசியவாத தலைவர் அலக்சு சல்மாண்ட், இசுக்காட்லாந்து செப்டம்பர் 18, 2014 அன்று பிரிந்து செல்ல வாக்களித்தால் பிரிட்டிசு பெட்ரோலியம் தேசிய உடைமையாக்கப்படும் என்றார். மற்றொரு பெட்ரோலிய நிறுவனமான "செல்"லும் பிரிவினைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.


அலக்சின் எதிர்ப்பாளரான இன்னொரு தேசியவாதி சில்லர், வாக்கெடுப்பில் பிரிந்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டால் பிரிட்டிசு பெட்ரோலியம் மற்றும் வங்கிகள் தங்கள் செயல்களின் விளைவுகளை சந்திப்பார்கள் என்றார். பிபிசி செய்தியாளர் இது தொடர்பாக அவரிம் கேட்டபோது, நிறுவனங்களை தேசியமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஊடகங்களின் கவனத்தைப் பெறவே அச்சொல்லை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இசுக்காட்லாந்து தேசியவாதிகளின் பேச்சு குறித்து பிரிட்டிசு பெட்ரோலியம் கருத்து தெரிவிக்கவில்லை.


பிரிவினையை எதிர்ப்பதால் மக்கள் இசுக்காட்லாந்து பிரிந்து செல்ல வாக்களித்தால் இசுடேண்டர்டு லைப் என்ற வங்கி தீவிரமாக தொழிலாளர் நல சட்டத்தை செயல்படுத்த கட்டாயப்படுத்தப்படும் என சில்லர் கூறினார்.


ராயல் பேங்க் ஆப் இசுக்காட்லாந்து. லாயிட்சு ஆகிய ஐக்கிய இராச்சியத்தின் இரு பெரும் வங்கிகள் இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தால் தங்கள் தளத்தை இங்கிலாந்துக்கு மாற்றிக்கொள்ளப்போவதாக தெரிவித்தன. அதே போல் தேசிய அவுத்திரேலிய வங்கியின் கிறைடசுடேல் வங்கியும் இங்கிலாந்துக்கு மாறிவிடுவதாக கூறியுள்ளது. ராயல் பேங்க் ஆப் இசுக்காட்லாந்து, இசுக்காட்லாந்தில் 11,500 பணியாளர்களை கொண்டுள்ளது..


$332.5 மில்லியன் சொத்து உடைய அமெர்டீன் சொத்து மேலாண்மையகத்தின் தலைமை செயல் அதிகாரி சுதந்திர இசுக்காட்லாந்தானது பெரும் வெற்றியாகும் என்கிறார். நோபெல் கிராசுஅர்ட் மெர்ச்செண்ட் வங்கியின் தலைவர் அங்குசு கிராசுஅர்ட் சுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல குறித்து வணிக சந்தையில் அளவுக்கு அதிகமாக மதிப்பிடுகின்றனர் என்கிறார்,


டச்சுச்சே வங்கி, இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடிவெடுத்தால் அது பெரும் தவறாக முடியும் என்றது. முதலீட்டாளர்கள் 27 பில்லியன் டாலர்களை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கடந்த மாதத்தில் எடுத்தனர்.


செப்டம்பர் வரை 201ல் நடந்த ஒரே ஒரு வாக்கெடுப்பைத் தவிர எல்லா வாக்கெடுப்புகளும் ஐக்கியவாதிகளுக்கே வெற்றி என்றன, ஆனால் இம்மாத வாக்கெடுப்பு தேசியவாதிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்கின்றன.


இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லவது போல் தெரிவதால் இசுக்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து நிறைய மக்கள் மத்திய எடின்பர்க் நோக்கி அணிவகுத்து செல்கிறார்கள்.


மூலம்[தொகு]