ஜி-7 உச்சி நாடுகளின் மாநாட்டில் உருசியாவிற்குக் கண்டனம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 6, 2014

ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு பெல்சியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் சென்ற புதன்கிழமை இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு அதன் உறுப்பு நாடான உருசியாவின் தலைவர் விளாதிமிர் பூட்டின் அழைக்கப்படவில்லை.


இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டின் அமைதியை கருத்தில் கொண்டு உருசியா அதன்மீது ஏற்படுத்தியிருக்கும் படைக்குவிப்பு போன்ற தேவையற்ற செயல்களை நீக்கிக்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்தலைவர்களும் ஒரு மனதாக முடிவெடுப்பதாக அறிவித்தார்கள்.


அத்தோடு உருசியா இந்த நிகழ்வை பொருட்படுத்தாத பட்சத்தில் அதன் மீது பொருளாதார தடைவிதிக்கவும் தயக்கம் காட்டமாட்டோம் என்று தலைவர்கள் தெரிவித்தார்கள்.


இதற்கிடையில் ரஷ்யா தனது படைகளை பின்வாங்க செய்துள்ளது.

மூலம்[தொகு]