டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது
- 11 பெப்பிரவரி 2024: நிலவில் தரை இறங்கிய ஐந்தாவது நாடானது சப்பான்
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 18 ஏப்பிரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்
- 17 ஏப்பிரல் 2016: ஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை
- 16 ஏப்பிரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்
திங்கள், செப்டெம்பர் 9, 2013
2020 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ நகரம் இஸ்தான்புல்லையும் மாட்ரிட்டையும் தோற்கடித்து தகுதி பெற்றது.
அர்ஜெண்டினா தலைநகர் புவனெசு அயரசில் பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு உறுப்பினர்களுக்கிடையே நடந்த வாக்கெடுப்பின் இறுதிச்சுற்றில் இஸ்தான்புல்லை 60-36 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே 1964ம் ஆண்டும் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆசியாவில் இரண்டாவது முறையாக போட்டியை நடத்தும் நகரம் டோக்கியோவாகும். 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த போட்டியிட்டாலும் அவை முறையே இலண்டனுக்கும் ரியோ டி ஜெனிரோ நகருக்கும் சென்றன.
இறுதிச்சுற்று வாக்குப்பதிவின் போது நிப்பானியப் பிரதமர் புக்குசிமா அணு உலை விபத்தால் டோக்கியோ பாதிக்கப்படவில்லை என்றும் இனிமேலும் பாதிக்கப்படாது என்றும் உறுதி கூறியதும் காரணமாகும்.
முதல் சுற்றில் மாட்ரிட் வெளியேறியது, அந்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமாக உள்ளதும் புட்ரோ நடவடிக்கையில் ஏற்பட்ட முறைகேடும் அதற்கு காரணமாகும்,
டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இலண்டன் மாநகர மேயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லும் மாட்ரிட்டும் மின்னணு வாக்குப்பதிவில் சமமான வாக்குகள் பெற்றதால் நடந்த இரண்டாவது வாக்குப்பதிவில் 49-45 என்ற வாக்குகள் கணக்கில் இஸ்தான்புல் வெற்றிபெற்றது.
மூலம்
[தொகு]- Olympics 2020: Tokyo wins race to host Games பிபிசி செப்டம்பர் 07, 2013
- Tokyo to serve as host for 2020 Olympic Games இசுபோர்டிங்நியுசு செப்டம்பர் 07, 2013