தெற்கு ஐசுலாந்தில் எரிமலை வெடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 21, 2010

தெற்கு ஐசுலாந்தில் எரிமலை ஒன்று வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து, அப்பகுதியச் சூழவிருந்த பல நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.


Eyjafjallajoekull என்ற பனியாற்றுப் பகுதிக்கு அண்மையில் இன்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல வீதிகள் மூடப்பட்டன.


ஐசுலாந்தில் உள்ள Eyjafjallajökull பனியாறு

எவரும் இதுவரையில் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்புக் கருதி கிட்டத்தட்ட ஐநூறு பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இப்பகுதியில் கடைசியாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் 1821 ஆம் ஆண்டில் எரிமலை வெடித்தது.


இந்த எரிமலை வெடிப்பை அடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்றும், இது பனிக்கட்டியாறுக்கு மேல் உள்ள பகுதி மேலும் ஒருக ஆரம்பிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"பிளிஜோஸ்லிட் பகுதியில் ஏற்கனவே தூறுகள் விழ ஆரம்பித்துள்ளதாகவும், பனிக்கட்டியாற்றின் மேல் இருந்து பிரகாசமான வெளிச்சம் வருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

மூலம்