தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கண்டனம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 3, 2011

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களை ஏப்ரல் 13 அன்றே, அவ்வளவு விரைவாக நடத்தவேண்டிய அவசியம் என்னவென்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார். சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை எதையும் கலக்கவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தலை வைத்திருந்தால், அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் பிரசாரத்திற்கு கூடுதல் நாட்கள் கிடைத்திருக்கும். மேலும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்தாலும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதிதான் நடைபெறவுள்ளது. மேலும் மே 17ம் தேதிக்குள் புதிய சட்டசபையை அமைக்கும் பணிகளை முடித்தாக வேண்டும். மே 14ம் தேதிதான் முழுமையான முடிவுகள் வெளியாகும். அதற்குப் பிறகு 2 நாட்கள் மட்டுமே உள்ளது புதிய சட்டசபையை அமைக்கவும், புதிய அமைச்சரவையை அமைக்கவும். இது மிகவும் குறுகிய கால அவகாசமாகும். மேலும், அரசியல் கட்சிகளுக்குப் பிரசாரத்திற்கான கால அளவும் வெறும் 17 நாட்களே கிடைக்கின்றன.என்றும் அவரால் வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டுகிறார். தேர்தல் ஆணையம் சுயாதீனமான அமைப்பு என்றாலும் கூட அதன் செயல்பாடுகள் சந்தேகத்திற்கப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். எது எப்படி இருப்பினும் திமுக தொண்டர்கள் இன்றே மக்களிடம் செல்ல வேண்டும். தேர்தல் பணிகளை தொடங்கிட வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.


இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு மார்ச் 28லிருந்து ஏப்ரல் 11வரை நடைபெறவிருக்கிறது, 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுவார்கள், அந்த நேரத்தில் பிரச்சாரம் தீவிரமாக இருக்கும், அதனால் மாணவர்களின் கவனம் சிதறும், தவிரவும் ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்களும் தேர்வில்தான் அதிகமாக கவனம் செலுத்தவேண்டியிருக்கும், அதனால் மற்ற பணிகள் பாதிக்கப்படும் எனவே தேர்தல் தேதி மாற்றியமைக்கப்படவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

மூலம்[தொகு]