உள்ளடக்கத்துக்குச் செல்

தொன்மையான எகிப்தியக் கைவினைப் பொருட்கள் ஸ்பெயினில் மீட்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டம்பர் 16, 2010


1999 இல் எகிப்தில் இருந்து திருடப்பட்டதாகக் கருதப்படும் பண்டையகால எகிப்தியக் கைவினைப் பொருட்கள் சில ஸ்பெயினில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


எகிப்தின் சக்காரா கல்லறைகள்

பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆராயும் மத்திய கிழக்கைச் சேர்ந்த தொல்லியலாளர் ஒருவர் எட்டுச் சுண்ணாம்புகற்கள் இந்தக் கடையில் இருப்பதைக் கண்டுபிடித்தார். இவை கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என பார்சிலோனா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இவை அனைத்தும் எகிப்திய அரசிடம் கையளிக்கப்படவிருக்கின்றன.


கெய்ரோவிற்குத் தெற்கே பண்டைய எகிப்தின் தலைநகரான மெம்பிசு என்ற இடத்தில் உள்ள சக்காரா என்ற மிகத் தொன்மையான கல்லறைப் பகுதியில் 1999 ஆம் ஆண்டில் இவை சூறையாடப்பட்டிருந்தன.


இக்கற்கள் 2,000 முதல் 10,000 யூரோக்கள் வரையில் அக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மூலம்

[தொகு]