நாசி கொலைக்குற்றவாளிக்கு செருமனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 23, 2010

1944 ஆம் ஆண்டில் மூன்று டச்சு நபர்களைக் கொலை செய்த குற்றத்திற்காக 88 வயதுடைய முன்னாள் நாசி அதிகாரி ஒருவருக்கு ஜெர்மனிய நீதிமன்றம் ஒன்று ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


ஐன்றிக் போயெர் (Heinrich Boere) என்பவர் தான் ஒரு கடைக்காரர், மருந்து விற்பனையாளர், மற்றும் ஒரு தீவிரவாதி என மூவரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தான் அதிகாரிகளின் கட்டளைக்கிணங்கவே அவர்களைக் கொலை செய்ததாக தெரிவித்தார்.


போயெர் நாசிகளின் ஒரு தீவிர உறுப்பினர் என்றும், 1940 ஆம் ஆண்டில் நெதர்லாந்து ஆக்கிரபமிப்புக்குள்ளான போது அதில் இணைந்தவர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜோசப் சோங்கிராபர் என்ற 90 வயதுடையவர் போர்க்குற்றங்களுக்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் அவரது மேன்முறையீடு இன்னமும் முடிவுறாத நிலையில் பிணையில் அவர் விடுதலை ஆகியிருக்கிறார்.

மூலம்[தொகு]