நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகுதியை 5.2 நிலநடுக்கம் உலுக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 25, 2012

நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிறைஸ்ட் சேர்ச் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 5.2 அளவு நிலநடுக்கம் தாக்கியது. ஆனாலும் பலத்த சேதம் எதுவும் நிகழவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நகரின் கிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் பிற்பகல் 2:44 மணிக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அரசு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து அச்சத்தில் மக்கள் வீதிகளில் இறங்கினர். சிவப்பு வலயம் என அழைக்கப்படும் நகர மத்தியப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடப் பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.


கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பெரும் நிலநடுக்கம் இப்பகுதியில் ஏற்பட்டதில் 200 இற்கும் அதிகமானோர் இறந்தனர். நகரின் மத்தியில் உள்ள பல வணிகக் கட்டடங்கள், மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனால் நகரைச் சுற்றியுள்ள பல பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவையாக உள்ளன. இந்த பெரும் நிலநடுக்கத்தை அடுத்து ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]