நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 22, 2011

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கிறைஸ்ட்சேர்ச் நகரில் இன்று இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர். நகரின் கட்டடங்கள் பல தரைமட்டமாயின. பலர் காயமடைந்தனர்.


கிறைஸ்ட்சேர்ச்

இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 1251 மணிக்கு கிறைஸ்ட்சேர்ச் நகரில் இருந்து 10 கிமீ தென்கிழக்கே 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களை மீட்க நிவாரணப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். இடிபாடுகளை அகற்றி சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிக்கு உதவுதவதற்காக ஆத்திரேலிய அரசு உடனடியாக நிவாரணப் பணியாளர்கள் பலரை கிறைஸ்ட்சேர்ச் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் 4 இல் இதே பகுதியில் இடம்பெற்ற 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதத்திலும் பார்க்க இம்முறை சேதம் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது 2 பேர் மட்டும் காயமடைந்தனர். நியூசிலாந்தில் ஓராண்டுக்கு 14,000 நிலநடுக்கங்கள் சராசரியாகப் பதியப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 20 நிலநடுக்கங்களின் அளவு 5.0 இற்கும் அதிகமானவை. 1968 ஆம் ஆண்டில் மிகப்பெரும் நிலநடுக்கம் நியூசிலாந்தில் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் அளவில் தெற்குத் தீவைத் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]