நியூயோர்க் கட்டட வெடிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 13, 2014

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவை அடுத்து ஏற்பட்ட வெடிப்பில் இரண்டு கட்டடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்தன. இவ்விபத்தில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.


மேலும் பலர் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 250 தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.


கட்டட வெடுப்புக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் வாயுக் கசிவு குறித்து அவசர சேவைக்குத் தகவல் தரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கம் போன்ற ஒரு சத்தத்துடன் கட்டடம் வெடித்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர்.


பல வாரங்களாக இப்பகுதியில் எரிவாயுக் கசிவு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்[தொகு]