உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்வேயின் கார்ல்சன் புதிய உலக சதுரங்க வாகையாளர், விசுவநாதன் ஆனந்த் தோல்வி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 23, 2013

நோர்வே நாட்டைச் சேர்ந்த 22 வயது மாக்னசு கார்ல்சன் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்தை வெற்றி கொண்டு 16வது உலக சதுரங்க வாகையாளர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.


2010 ஆம் ஆண்டில் கார்ல்சன்
2008 ஆம் ஆண்டில் விசுவநாதன் ஆனந்த்

சென்னையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியின் நேற்றைய பத்தாவது ஆட்டத்தை சமப்படுத்தியன் மூலம் கார்ல்சன் இரண்டு ஆட்டங்கள் இன்னும் ஆட வேண்டிய நிலையில், 6.5 புள்ளிகள் பெற்றதை அடுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


12 ஆட்டங்களைக் கொண்ட இறுதிச் சுற்றில் 10வது ஆட்டத்தின் முடிவில் கார்ல்சன் 6.5-3.5 புள்ளிகள் பெற்று முன்னணியில் இருந்தார். இவர் இப்போது முன்னர் எவருக்கும் கிடைக்காத அளவு தரத்தில் உள்ளார். ஆனாலும், உலகின் இளம் வாகையாளர் என்ற இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. சில வாரங்கள் வித்தியாசத்தில் காரி காஸ்பரோவ் அந்த இடத்தைச் தக்க வைத்துள்ளார்.


மொத்தப் பரிசுத் தொகையான 2.4 மில்லியன் டாலர்களில் கார்ல்சன் 60% ஐயும், மீதத்தை விசுவநாதன் ஆனந்தும் பெற்றுக் கொள்வர்.


2007 ஆம் ஆண்டு முதல் உலக சாம்பியனாகத் திகழும் விசுவநாதன் ஆனந்த் (43 வயது) உலகத் தரவரிசையில் எட்டாவதாக உள்ளார்.


மூலம்

[தொகு]