பாக்கித்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 28, 2010

பாக்கித்தானின் லாகூர் நகரில் உள்ள அகமதியா பிரிவைச்சார்ந்த இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.


லாகூரின் மிடில் டவுன் மற்றும் கர்கி சகு பகுதிகளில் வெள்ளிக்கிழமை வழிபாட்டில் இருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகள் வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மசூதிகளிலும் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாக்கித்தானின் தாலிபான் அமைப்பு காரணமாக இருக்கலாம் காவல்துறை கருதுகிறது.


தங்களை முசுலிமாக அகமதியா சமூகம் கருதினாலும் பாக்கித்தானில் அச்சமூகம் முசுலிமாக கருதப்படுவதில்லை. தீவிரவாத போக்குடைய சில அமைப்புகள் அகமதியா சமூகத்தை சார்ந்தவர்களை தாக்கியிருந்தாலும் அவர்களின் வழிபாட்டு இடம் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மூலம்[தொகு]