பிலிப்பைன்சில் சூறாவளி, வெள்ளப்பெருக்கு, 650 பேர் வரை உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 18, 2011

பிலிப்பைன்சின் தெற்குத் தீவான மின்டானாவோவில் வாஷி என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கியதை அடுத்து இடம்பெற்ற பெருங்காற்று மற்றும் மழையினால் குறைந்தது 650 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


பிலிப்பைன்ஸ்

கடந்த 12 மணி நேரமாகப் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென்று மழை வலுத்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.


சூறாவலை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


பொதுவாக ஆண்டு தோறும் பிலிப்பீன்சில் சூறாவளிகள் தாக்கினாலும், நாட்டின் தெற்குப் பகுதியில் குறைந்தளவு சேதங்களே ஏற்படுவதுண்டு.


மூலம்[தொகு]