பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 7, 2013

கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் திடீரெனத் தீ பரவியதை அடுத்து விமான நிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டது.


நைரோபி விமான நிலையம் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமானதாகும். இன்று அதிகாலை 5 மணிக்கு விமானப் புறப்படு தளத்தில் குடியகல்வுப் பகுதியில் தோன்றிய தீ விரைவாக பன்னாட்டு விமான இறங்கு துறைக்கும் பரவியது.


உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் அறிவிக்கப்படவில்லை, ஆனாலும், தீ மிகப் பெரிதாக இருந்ததென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இறங்குதுறை மற்றும் குடியகல்வுப் பகுதிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நைரோபியில் வந்திறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திசை திருப்பப்பட்டன.


விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரையில் அறியப்படவில்லை. விபத்துக் குறித்து விசாரிப்பதற்கு கென்ய அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.


மூலம்[தொகு]