உள்ளடக்கத்துக்குச் செல்

போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 26, 2009


போப்பாண்டவர் 16ம் ஆசீர்வாதப்பர் நள்ளிரவு நத்தார் உரை நிகழ்த்த வந்தபோது மன நலம் பாதித்த பெண் ஒருவர் தடுப்புகளைத் தாண்டி வந்து அவரை தள்ளி விட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இ‌தி‌ல் ‌‌நிலை தடுமா‌றி ‌விழு‌ந்த போ‌ப் ஆ‌ண்டவ‌ர் சுகா‌க‌ரி‌த்து‌க் கொ‌ண்டு எ‌ழு‌ந்து ‌பிரா‌த்தனை‌யி‌ல் ஈடுப‌ட்டா‌ர்.


போப்பாண்டவர் 16ம் ஆசீர்வாதப்பர்

பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரே தடுப்புகளைத் தாண்டி வந்து போப்பாண்டவர் மீது மோதி தள்ளி விட்டதாகவும் . இதனால் நிலை குலைந்த போப்பாண்டவர் தடுமாறி விழுந்தாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் சிரோ பெனிடிட்டினி தெரிவித்தார்.


புனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதினார். அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார்.


இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப் ஆண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது.


ஆனா‌ல் அவருட‌ன் வ‌ந்த ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த பா‌தி‌ரியா‌ரு‌க்கு கா‌லி‌ல் எலு‌ம்பு மு‌றிவு ஏ‌ற்ப‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.


பாப்பரசர் புனித 16ம் பெனடிக் மீது தாக்குதல் நடத்திய பெண் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டை உடையவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 25 வயதான குறித்த பெண் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டுக்களை உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், குறித்த பெண் சித்த சுயாதீனமற்றவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெண் பாப்பரசர் மீது நடத்திய தாக்குதலினால் பாரிய பாதுப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.


இந்தத் தாக்குதலின் காரணமாக பாப்பரசர் சற்று சோர்வடைந்த போதிலும், நத்தார் ஆராதனைகளுக்கு இடையூறு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்

[தொகு]