முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 15, 2011

பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை, லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், ராவல்பிண்டி நீதிமன்றம் தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.


பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் சாட்சியமளிப்பதற்கு முஷாரப் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெனாசிர் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முஷாரப் நீதிமன்றில் சமூகமளிக்காத பட்சத்தில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.


பாக்கித்தான் உள்நாட்டமைச்சர் ரெகுமான் மாலிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே முஷாரப்பை நாடு கடத்தக்கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


பொதுவாக நாடு கடத்தல் பிரித்தானியாவும் பாக்கித்தானும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதனால் பாக்கித்தான் உளவுத்துறை, முஷாரப்பை நாடு கடத்தும் படி, பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தனது சட்டப்படி தான் பிரித்தானியா முடிவெடுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.


மூலம்[தொகு]