யாழ்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களை புகழ்ந்த சிறிராம் சர்மா

விக்கிசெய்தி இலிருந்து

சிறிராம் சர்மா யாழ் மற்றும் சென்னை ஊடக மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்தி விட்டு சென்று தனது முகநூலில் பதிந்த பதிவு இன்று, சென்னைப் பல்கலைக் கழகத்தில்...யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருந்த கூர்மதி கொண்ட இருபத்தைந்து மாணவ – மாணவியர்களிடையே....ஓர் எழுச்சி நிறைந்த நாள்..!

<gallery>

யாழ் ஊடக மாணவர்களுடன் சிறிராம் சர்மா


11 மணிமுதல் 12 மணி வரை... 'வேலு நாச்சியார்' - தொடர்பியல் பார்வையில் ஆக்கமும் சவால்களும் ' - என்னும் தலைப்பில் நான் சொற்பொழிவாற்ற வேண்டும் ! ஆனால், கடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கும் சுற்றுலா சென்று வந்திருக்கும் மாணவர்கள்

அயர்ச்சியாக.... தூக்கக் கலக்கத்துடன்.. 

ஒவ்வொருவராக அரங்கம் வந்து நிறைக்கும் ஓர் சூழல்! நானொரு வல்லமையுள்ள ஓர் பேச்சாளனா என்றால் இல்லை..!! உணர்வு வயப்பட்டு பேசும் ஓர் படைப்பாளன்... அவ்வளவுதான் !!

ஆயினும் வேலு நாச்சியார் - வரலாறு - இதழியல் - தொடர்பியல் என நான்கு கூறுகளை உள்ளடக்கிய எனது ஒரு மணி நேர சொற்பொழிவு என்பது...உணவு இடை வேளையையும் கடந்து...இரண்டரை மணி நேரமாக நீண்டு...மதியம் 1. 30 க்குத் தான் இனிதே நிறைவடைந்தது !!

எனில், அதற்கு முழு முதற் காரணம்...யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் உள்வாங்கும் திறனும் – இடையிடையே அவர்கள் எழுப்பிய ஆச்சர்யமூட்டும் வரலாற்றுக் கேள்விகளும் – கூர்ந்த மதிக்கூறும்தான் ! இரண்டரை மணி நேர இயல்பான சொற்பொழிவை அரங்கம் நிறைத்திருந்திருந்து உள்வாங்கி தங்கள் உணர்வுகளால் என்னை நெகிழ வைத்து விட்டார்கள் ! 'கடவுளே...இந்த பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை சம்பாதித்துக் கொடேன்...!! ' என்று நான் வணங்கும் அந்த பரம்பொருளை நோக்கி மனமுருக தியானித்துக் கொண்டேன்...!! தொடக்கத்தில்...ஈழத்தில் இனப் படுகொலைக்கு ஆளான ஆன்மாக்களுக்கு இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று 'மௌன அஞ்சலி' செய்யக் கேட்டுக் கொண்டு...துவங்கிய எனது உரையை...முடிவில் 'வைகோ' அவர்களின் வேலு நாச்சியார் குறித்த... 'ஆறு நிமிட எழுச்சியான வீடியோ திரையிடலோடு' நிறைவுக்கு கொண்டு வந்தேன்!! எதிர்காலம் குறித்த நம்பிக்கையை என்னுள் விதைத்தபடி...எழுந்து நின்றார்கள்...யாழ்ப்பாணத்து மாணவக் கண்மணிகள் ! நன்றியென்றும்...எனது மனமாட்கொண்ட துறை ஆசான் 'கோபாலன் இரவீந்திரன்' அவர்களுக்கே உரியது ! வாழிய ! எங்கள் தமிழணங்கே...!! சிறிராம் சர்மாவுக்கு யாழ் ஊடக மாணவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்துகொள்ளுகின்றனர், என மாணவர்கள் தெரிவித்தனர்.