லாஸ்வேகாஸ் நகரில் தெருக்களில் உலாவிய புலி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 2, 2009, ஐக்கிய அமெரிக்கா:


அமெரிக்காவில் சூதாட்ட விடுதிகள் மலிந்த நகரம் லாஸ்வேகாஸ். இந்த நகரத்தில் ஒரு மாஜிக் ஷோ நடந்து வந்தது. மாஜிக் ஷோ நடத்தும் குழுவினர் பாதுகாப்பில் இருந்து வந்த ஒரு புலி அங்கு இருந்து தப்பி, தெருக்களில் சுற்றி கொண்டு இருந்தது. இரவு 9 மணிக்கு இந்த புலியை சாலையில் பார்த்து விட்டு ஒருவர் போலீசுக்கு டெலிபோன் செய்து தகவல் கொடுத்தார். புலியை பிடிக்க போலீசார் மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் உதவியை நாடினார்கள். பிறகு அந்த புலி பிடிபட்டது.


புலி சாலைகளில் சுற்றியபோது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் மாஜிக் நடத்தும் குழுவினரை அழைத்து இனிமேலும் புலி தப்பித்து போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரித்தனர்.

மூலம்[தொகு]

  • தினத்தந்தி