லோக்பால் சட்ட முன்வரைவு: இந்திய நடுவண் அரசு மீது சமூக சேவகர் அண்ணா அசாரே குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 1, 2013

திருத்தப்பட்ட லோக்பால் சட்ட முன்வரைவு 'வலுவில்லாதது' எனவும், இதன்மூலம் நாட்டிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள் எனவும் சமூக சேவகர் அண்ணா ஹசாரே, நடுவண் அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.


தேர்தல் ஆணையத்தைப் போன்று மத்திய புலனாய்வுத்துறை (CBI – Central Bureau of Investigation) மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC – Central Vigilance Commission) போன்றவையும் தன்னிச்சையாக செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும் என அண்ணா ஹசாரே கோரினார்.


இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், "தேவைப்படின் மீண்டும் ராம்லிலா மைதானத்திற்குச் செல்வேன்" என தெரிவித்தார். இன்னொரு உண்ணாவிரதப் போராட்டம் குறித்து இவ்விதம் அவர் சூசகமாக தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டதாகவும் அண்ணா ஹசாரே குற்றஞ்சாட்டினார்.


"நாடு முழுவதும் பயணித்து அரசின் வஞ்சகத்தன்மையை மக்களுக்கு உணர்த்துவேன்; தூய்மையானவர்களை 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்குமாறு மக்களை ஊக்கப்படுத்துவேன்" என அவர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.



மூலம்[தொகு]