உள்ளடக்கத்துக்குச் செல்

வட இந்திய மாநிலங்களில் கடும் குளிர், 135 பேருக்கும் மேல் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 29, 2011

வட இந்திய மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் குளிர் நிலவுவதால் வெப்பநிலை இயல்பான அளவை விட குறைந்துள்ளது. குளிரால் மாத்திரம் 135 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதே நேரம் காலை 11 மணிவரை பனி மூட்டமாக இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டும் பலர் இறந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை மறை 4.7 பாகை செல்சியசாகவும், லடாக் பகுதியில் -14.4 பாகை செல்சியசாகவும் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கான்பூர், ஆக்ரா, கோரக்பூர், வாரணாசி, அலகாபாத், லக்னோ ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட, குளிர் அதிகமாக உள்ளது. இங்கு சாரசரியாக வெப்ப நிலை 4.1 பாகை செல்சியசாக உள்ளது.


இதற்கிடையில், இலங்கையின் தலைநகர் கொழும்பில் கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குளிரான காலநிலை நேற்று நிலவியது. புதன்கிழமை காலையில் அங்கு வெப்பநிலை 18.2 பாகை செல்சியசாகப் பதிவாகியது. 1951 ஆம் ஆண்டுக்குப்பின் கொழும்பு நகரில் பதிவாகிய மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும்.


மூலம்

[தொகு]