வடக்கு சுமத்திரா தீவில் கடுமையான நிலநடுக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 11, 2012

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவில் இன்று அதிகாலை 2.37 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலி்ல் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு ‌மையம் தெரிவித்தது.


இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.


நிலநடுக்கம் பான்டாஏக் மாகாணத்திலிருந்து 420 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் உணரப்பட்டதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பான்டாஏக் மக்கள் பீதியில் வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேறினர். சேதங்களை பற்றிய தகவல் இதுவரை ஏதும் தெரியவில்லை.


கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்திய பெருங்கடலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைப்போன்று இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .


மூலம்[தொகு]