ஸ்கொட்லாந்து விடுதலை பெறும் நாள் 2016 மார்ச் 24 எனக் குறிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 25, 2013

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து போவதற்கு நடத்தப்படவிருக்கும் பொதுக் கருத்துக்கணிப்பு வெற்றி பெறும் பட்சத்தில் 2016 மார்ச் 24 ஸ்கொட்லாந்து விடுதலை பெறுவதற்கான நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஸ்கொட்லாந்து விடுதலைக்கான திட்டவரைபை உள்ளடக்கிய வெள்ளை ஆவணம் ஒன்றிலேயே இந்தத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வெள்ளை ஆவணத்தில் ஸ்கொட்லாந்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் சமத்துவம் போன்ற பல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் துணை முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறினார். இந்த 670-பக்க வெள்ளை ஆவணம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.


ஸ்கொட்லாந்தின் செயலாளர் அலிஸ்டர் கார்மைக்கேல் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "உத்தேச வாக்கெடுப்பு ஐக்கிய இராச்சியத்தின் எதிர்காலத்திற்கு ஒரு பெரும் சவால்," எனக் குறிப்பிட்டார்.


ஸ்கொட்லாந்து விடுதலை பெறுவதற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் மாதம் 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு வெற்றி பெற்றால், தற்போதைய ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் 2016 மார்ச் 23 நள்ளிரவு கலைக்கப்படும்.


மூலம்[தொகு]