உள்ளடக்கத்துக்குச் செல்

2010 உலக கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 12, 2010

நேற்றிரவு தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற 2010 உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ணத்தை முதற் தடவையாகக் கைப்பற்றிக் கொண்டது.


இறுதிப்போட்டி ஜொகான்னஸ்பர்க் சொக்கர்சிட்டி மைதானத்தில் இடம்பெற்றது.

ஆட்ட முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் அணி 1 கோல் போட்டு வெற்றி பெற்றது. இதுவே ஸ்பெயின் அணி கைப்பற்றிய முதலாவது உலகக்கோப்பையாகும்.


நெதர்லாந்து அணியின் ஜான் கட்டிங்கா இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றதால் வெளியேற்றப்பட்டார். இதனால் கடைசி நிமிடங்களில் நெதர்லாந்து அணி 10 பேருடன் மட்டுமே விளையாடியது. இறுதி ஆட்டத்தில் 13 பேர் மஞ்சள் அட்டை பெற்றனர்.


உருகுவே அணியின் டியேகோ ஃவார்லான் இந்த உலகக்கோப்பையில் 5 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தங்க காலணி பரிசாக அளிக்கப்பட்டது.


இறுதி போட்டியை நெல்சன் மண்டேலா பார்வையிட்டார். இவரின் கொள்ளுப்பேத்தி விபத்தில் மரணமடைந்ததால் இவர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

மூலம்

]