2010 குளிர்கால ஒலிம்பிக்சு வான்கூவரில் நிறைவடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 1, 2010

பிப்ரவரி 12ல் ஆரம்பித்து 17 நாட்கள் நடந்த 2010 ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் கனடாவின் வான்கூவரில் பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது. கடைசி ஆட்டமாக பனி வளைபந்தாட்டம் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்தது. இதில் கனடா வெற்றி பெற்றது.


மொத்த பதக்கப் பட்டியலில் 37 பதக்கங்கள் பெற்று அமெரிக்கா முதல் இடத்தை பெற்றது. தங்க பதக்கங்கள் எண்ணிக்கையில் 14 பெற்ற கனடா முதல் இடத்தை பிடித்தது.


இது வரை நடந்துள்ள குளிர்கால ஒலிம்பிக்சுகளில் எந்த நாடும் 14 தங்க பதக்கங்களை வென்றதில்லை. முதல் முறையாக கனடா அச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.


இப்போட்டி ஆரம்பிக்கும் முன் நடந்த பயிற்சி ஓட்டத்தின் போது ஜார்ஜியாவின் நொடர் குமாரிடஸ்வில்லி இறந்தார்.


நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்த பதங்கங்கள்
அமெரிக்கா 9 15 13 37
ஜெர்மனி 10 13 7 30
கனடா 14 7 5 26
நார்வே 9 8 6 23
ஆஸ்டிரியா 4 6 6 16
இருசியா 3 5 7 15
தென் கொரியா 6 6 2 14
சீனா 5 2 4 11
சுவீடன் 5 2 4 11
பிரான்ஸ் 2 3 6 11

மூலம்[தொகு]