65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 21, 2010


65 ஆண்டுகளாக அழிந்துவிட்டது எனக்கருதப்பட்ட இலங்கையின் ஓடன் சமவெளி தேவாங்கு (Loris tardigradus nycticeboides) தற்போது இலங்கையில் வாழ்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


தேவாங்கு

இத்தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. இலங்கையின் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவ்விலங்கின் வாழ்விடம் சுருங்கி அற்றுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். மேலும் தற்சமயம் இவற்றின் இயற்கை உயிர்த்தொகை நூற்றிற்கும் குறைவானதாகவே இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மூலம்[தொகு]