Wikinews:சமுதாய வலைவாசல்

Wikinews தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

[தொகு] திட்ட தொடக்கம் - சில குறிப்புகள்

  • அவசரப்படாமல் நன்கு திட்டமிட்டு இந்த திட்டத்தை செயலாக்கம் செய்ய வேண்டும்.
  • அதிகம் cut and paste செய்து விட்டு, திக்கு முக்காடமல் இருப்பது நன்று. குறிப்பாக தொகுத்தல் தொடர்பாக விக்கிபீடியாவில் பெறக்கூடிய தகவல்களை இங்கேயும் பிரதி செய்வது தேவையற்றது.
  • செய்திக் கட்டுரை என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? ஒரு நிகழ்வு குறிப்பிடத்தக்க செய்திதான் என்று எப்படி வரையறை செய்வது? போன்ற விடயங்களை முதலில் வரையறை செய்ய வேண்டும்.
  • செய்திக் கட்டுரை பொதுக் கட்டுரையில் இருந்து வேறுபட்டது. வடிவத்தில், நோக்கத்தில், நடையில் வேறுபட்டது. என்ன, எவர், எங்கே, எப்பொழுது, ஏன் போன்ற கேள்விகளுக்கு சுருக்கமாக முதல் பந்தியிலேயே பதில் தந்து பின்னர் விரித்து சொல்வது மரபு. திகதி, இடம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
  • ஆங்கில முன்மாதிரிகளை ஆய்ந்து எமக்குரிய வரையறைகளை நாம் வகுக்கலாம்.
  • நிதானமாக செய்ய வேண்டும், இங்கு இழுப்பறிகள் வர கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
  • உலகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், இந்திய செய்திகள், தமிழ்நாட்டு செய்திகள் என்று வகைப்படுத்த வேண்டி வரும் என நினைக்கின்றேன்.
  • http://www.ifj-asia.org/files/road_to_peace_tamil.pdf

--Natkeeran 02:24, 5 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] பிற தகவல்கள்

தமிழர்களின் பாரம்பரியத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடும், தந்தை பெரியாரின் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டது இணைய வானொலி பெரியார் குரல்.

[தொகு] மொழிநடை மரபுகள்

விக்கிசெய்திகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள மொழிநடையையும் மரபுகளையும் பின்பற்றுவது நல்லதாக இருக்கும் என நினைக்கிறேன். செய்தி வழங்கலில் நடை சற்று வேறாக இருக்கும் என்பதை உணர்கிறேன், ஆனால் கூடியவரை கிரந்தம் தவிர்த்து எழுதுதல், தமிழ் மொழிக்கு இயல்பான அதே நேரத்தில் அவ்வவ் முதல் மொழிகளுக்கு முன்னுரிமை தந்து எழுதுதல் முதலியன நல்ல வழக்கங்களே. எசுப்பானியம், இடாய்ட்சு, பிரான்சியம் என்றெல்லாம் எழுதுவது அவ்வவ் மொழிகளுக்கு முன்னுரிமை தந்த வழக்கங்கள். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தைப் பின்பற்றி ஜெர்மன் என்று எழுதுவது தமிழில் தேவை இல்லாதது. செருமனி என்பதை இடாய்ட்சுலாந்து என்றே எழுதலாம். நெதர்லாந்து, இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, இடாய்ட்சுலாந்து, சுவிட்சர்லாந்து என்பது போல. விக்கிச் செய்திகள் புதுக் கோணத்தில், அறிவார்ந்த முறையில் செய்திகளைத் தேர்ந்து வழங்கும் ஒன்றாக இருக்கட்டும். --செல்வா 17:54, 26 செப்டெம்பர் 2009 (UTC)

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்