நடிகை சுஜாதா தனது 58வது அகவையில் காலமானார்
Appearance
தொடர்புள்ள செய்திகள்
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 21 மார்ச்சு 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 9 ஏப்பிரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
புதன், ஏப்பிரல் 6, 2011
பிரபல தென்னிந்திய நடிகை சுஜாதா இன்று காலமானார். திசம்பர் 10, 1952 இல் இலங்கையில் பிறந்த இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இவரின் தாய்மொழி மலையாளம். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ள சுஜாதா, கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்தமான் காதலி, விதி, அன்னக்கிளி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தன. கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை. சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று ஏப்ரல் 6, 2011 சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார்.
மூலம்
[தொகு]- நடிகை சுஜாதா மரணம், தட்ஸ்தமிழ், ஏப்ரல் 06, 2011
- இலங்கையில் பிறந்த நடிகை சுஜாதா காலமானார், அததெரன, ஏப்ரல் 06, 2011