உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் சீனத் தலைவரின் வருகையை எதிர்த்து திபெத்தியர் தீக்குளித்து இறப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 28, 2012

இந்தியத் தலைநகர் தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி இறந்துள்ளார். சாம்பெல் யேசி என்பவர் 90 விழுக்காடு எரிகாயங்களுக்கு இலக்காகி இறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரிக் நாடுகளின் (இந்தியா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியாழன் அன்று இந்தியா வரவிருக்கும் சீனத் தலைவர் ஹூ சிந்தாவுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று திங்கட்கிழமை தில்லியில் நடைபெற்ற போதே இவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


சீனாவில் மட்டும் கடந்த சில மாதங்களில் பல பெண்கள் உட்படக் குறைந்தது 25 திபெத்தியர்கள் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தீக்குள்த்து இறந்துள்ளனர். பெரும்பாலான தீக்குளிப்புகள் சிக்குவான் மாகாணத்தின் திபெத்தியப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. திபெத்தியப் பகுதிகளை சீனாவில் இருந்து பிரிக்க முடியாது என சீனா கூறி வருகிறது.


நாடுகடந்த திபெத்திய அரசாங்கம் வட இந்திய நகரான தரம்சாலாவில் இயங்கி வருகிறது.


மூலம்

[தொகு]