உள்ளடக்கத்துக்குச் செல்

விண்வெளி ஆய்வுக்காக 'வைஸ்' விண்கலத்தை நாசா ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 17, 2009


விண்வெளியில் மறைந்துள்ள விண்பொருட்களைக் கண்டறியும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட விண்கலம் ஒன்றை நாசா திங்களன்று கலிபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியது.


வைஸ் (Wide-field Infrared Survey Explorer - Wise) எனப்படும் மேற்படி விண்கலம் "டெல்ட்டா II" ஏவுகணை மூலம் வாண்டென்பேர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து 1409 GMT மணிக்கு ஏவப்பட்டது.


320 அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இவ்விண்கலம் சில குளிர்மையான விண்மீன்கள், பிரகாசமான பால்வெளிகள் உட்பட இதுவரையில் எவரும் அவதானிக்காத விண்பொருட்களைக் கண்டறியும். 25 ஒளியாண்டுகள் தூரத்திற்குள் உள்ள விண்பொருட்களை இது அடையாளம் காணும் எனக் கருதப்படுகிறது.


அகச்சிவப்பு ஒளியில் முழு வானத்தையும் ஆராயும் இவ்விண்கலம் முன்னர் அனுப்பப்பட்ட விண்கலங்களை விட பல நூறு மடங்கு உணர்திறன் மிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் வெற்றுக் கண்களால் அவதானிக்கப்படாத விண்பொருட்களைக் கண்டறிய முடியும்.


"பூமியை நெருங்கி வரும் இருண்ட விண்கற்கள், வால்வெள்ளிகள் போன்றவற்றை முன்கூட்டியே அடையாளம் கண்டு, இவை பூமியைத் தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை இது கண்டறியும்", என நாசாவைச் சேர்ந்ததிட்ட மேலாண்மையளர் வில்லியம் ஐரேசு தெரிவித்தார்.

மூலம்

[தொகு]