உள்ளடக்கத்துக்குச் செல்

டிஸ்கவரி விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 25, 2011

அமெரிக்காவின் டிஸ்கவரி விண்ணோடம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கடைசித் தடவையாக நேற்று விண்ணுக்கு ஏவப்பட்டது.


எஸ்டிஎஸ்-133 டிஸ்கவரியில் சென்ற வீரர்கள்: ஆல்வின் ட்ரூ, நிக்கோல் ஸ்டொட், எரிக் போ, ஸ்டீவன் லின்ட்சி, மக்கல் பாரட், ஸ்டீவ் போவன்

ஆறு விண்வெளி வீரர்களுடன் 1653 உள்ளூர் நேரத்தில் இது புறப்பட்டது. 11 நாட்கள் விண்ணில் தங்கியிருக்கும் இவ்விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு புதிய களஞ்சிய அறை ஒன்றையும், உயர் தொழில்நுட்ப எந்திரன் ஒன்றையும் காவிச் சென்றுள்ளது.


டிஸ்கவரி புறப்படும் காட்சியை விண்வெளி மையத்துக்குச் செல்லும் வீதியெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி நின்று கண்டு களித்தனர்.


1984 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்ணுக்கு ஏவப்பட்ட டிஸ்கவரிக்கு இது 39வது பயணம் ஆகும். இப்பயணத்துடன் இது மொத்தம் 230 மில்லியன் கிமீ தூரம் பறந்திருக்கிறது. இந்த 39வது பயணம் எஸ்டிஎஸ்-133 (STS-133) எனப் பெயரிடப்பட்டுள்ளது.


நாசாவின் விண்ணோடங்கள் அனைத்தும் இவ்வாண்டு இறுதிக்குள் ஓய்வெடுக்க இருக்கின்றன. அதன் பின்னர் இரசியாவின் சோயுஸ் விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.


ஆஸ்டிரோயிட் எனப்படும் சிறுகோள்களை நோக்கி மனிதர்களை அனுப்புவது நாசாவின் அடுத்த திட்டங்களில் ஒன்றாகும்.


மூலம்

[தொகு]