சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம், அறிவியலாளர்கள் எச்சரிக்கை
சனி, சூன் 12, 2010
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.
“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.
நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும். | ||
—முனைவர் ரிச்சார்ட் ஃபிஷர் , நாசா |
இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.
அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
மூலம்
[தொகு]- Severe Sun Flares Predicted to Reach Earth, ஈப்போ டைம்ஸ், ஜூன் 11, 2010
- The 2012 Apocalypse — And How to Stop It, wired.com, ஏப்ரல் 17, 2009