உள்ளடக்கத்துக்குச் செல்

காலநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்நோக்கும் ஆஸ்திரேலிய வீடுகள்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 16, 2009


புவி சூடாதலினால் ஆஸ்திரேலியாவில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதால் அங்குள்ள சுமார் 250,000 வீடுகள் ஆபத்தை எதிர்நோக்குகின்றன.


"ஆஸ்திரேலியக் கடலோரப் பகுதிகளுக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள்" பற்றிய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


கடல் மட்ட அளவு 1.1 மீட்டர் (43 அங்குலம்) உயர்ந்தால் 2100ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படும்.


அப்போது 157,000 முதல் 250,000 தற்போதைய குடியிருப்பு வீடுகள் பாதிக்கப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.


ஆஸ்திரேலிய முக்கிய விமான நிலையங்களும் மருத்துவமனைகளும் மின் நிலையங்களும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஆண்டுக்கு 32 மில்லியன் மக்கள் பயணிக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் விமான நிலையமான சிட்னி விமான நிலையம் கடலோரப்பகுதியில் அமைந்திருப்பதால் இதன் அமைவிடம் குறிப்பாக ஆபத்தை எதிர்நோக்குவதாக அறிக்கை எச்சரிக்கின்றது.

மூலம்

[தொகு]