பாக்கித்தானில் சுரங்க வெடிப்பில் சிக்கி தொழிலாளர்கள் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 21, 2011

பாக்கித்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வாயு வெடிப்புகளில் குறைந்தது 45 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர்.


மாகாணத் தலைநகர் குவெட்டாவிற்கு அருகில் உள்ள இச்சுரங்கம் பாதுகாப்பற்றதென சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த எச்சரிக்க புறக்கணிக்கப்பட்டிருந்தது.


"சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க நாம் முயன்று வருகிறோம். ஆனாலும், சுரங்கத்தினுள் ஒக்சிசன் பற்றக்குறை உள்ளதால், அவர்களை உயிருடன் மீட்பது கடினமாகவே இருக்கும்," என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கனிமப் பொருட்கள் பெருமளவு காணப்படுகிறது. இச்சுரங்கம் பாக்கித்தான் அரசுக்குச் சொந்தமானது, ஆனாலும் இது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.


மூலம்[தொகு]