பெரிய வெளிச்சமான 'முழுப்பெருநிலவு' அவதானிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 6, 2012

"முழுப்பெருநிலவு" ஒன்று வானில் அவதானிக்கப்பட்டது. நிலா வழக்கத்தை விடப் பெரிதாகவும், எழிலுடனும் ஒளிர்ந்தமை அவதானிக்கப்பட்டது. இந்த நிலவு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தமை கடலலையில் பெரும் ஏற்ற இறக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அண்மைநிலை முழு நிலவு எனக்கூறப்படும் இந்நிகழ்வின் போது நிலவு பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதிலும் பார்க்க 14% பெரிதாகவும், 30% ஒளிர்வு கூடியதாகவும் காணப்படும்.


நிலவு மிகப் பெரிதாக இருக்கும் போது அது பூமியில் இருந்து 356,400கிமீ (221,457 மைல்கள்) தூரத்தில் இருக்கும், இதன் வழமையான தூரம் 384,000கிமீ (238,606 மைல்கள்) ஆகும். நிலவு பூமிய வட்டப்பாதையில் அல்லாமல் நீள்பாதையில் சுற்றி வருவதால் பூமியிலிருந்தான அதன் தூரம் கூடிக் குறையும். கடைசியாக 2011 மார்ச் 19 அன்று முழுப்பெருநிலவு ஏற்பட்டது.


"பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கம் (lunar tide) கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும்," என ரோயல் வானியல் கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் மசே கூறுகிறார். ஆனாலும் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய இயற்கை அழிவுகள் ஏற்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.


மூலம்[தொகு]