தெற்கு பசிபிக்கில் வனுவாட்டுக்கு அருகே பெரும் நிலநடுக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 21, 2011

தெற்கு பசிபிக் தீவான வனுவாட்டுவில் 41 கிமீ ஆழத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரங்கள் தெரியவில்லை.


7.1 அளவான நிலநடுக்கம் இன்று அதிகாலை உள்ளூர் நேரம் 03:55 மணிக்கு, தலைநகர் போர்ட்-விலாவுக்கு 63கிமீ தெற்கே ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும், பசிபிக் பகுதியில் ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


80 சிறு தீவுகளைக் கொண்ட வனுவாட்டு ஏறத்தாழ கால் மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது நிலநடுக்கங்கள், மற்றும் ஆழிப்பேரலைகள் தாக்கும் பகுதியாகும்.


இன்றைய நிலநடுக்கத்துக்குப் பின்னரான எதிர்த்தாக்கங்கள் பல இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூரில் ஆழிப்பேரலைகள் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]