உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெஞ்சு ரெயூனியனை சூறாவளி தாக்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 3, 2013

இந்தியப் பெருங்கடல் சூறாவளி பிரெஞ்சுத் தீவான ரெயூனியனைத் தாக்கியதில் பெரும் மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரையும் வீடுகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


60,000 இறிகும் அதிகமான வீடுகளில் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


டுமைல் புயல் என அழைக்கப்படும் இந்த சூறாவளி ரெயூனியன், மற்றும் மடகஸ்காருக்குத் தெற்கே வீசியது. 180கிமீ/மணி வேகத்தில் புயல்காற்று வீசியது.


ரெயூனியனில் வான் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


நாளை இந்த சூறாவளி ரெயூனியனை மேலும் பலமாகத் தாக்கும் எனக் கூறப்படுகிறது.


மூலம்

[தொகு]

[[]]