உள்ளடக்கத்துக்குச் செல்

விண்வெளி நிலையத்தில் இயற்கை அழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் கருவி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 8, 2013

புவியின் வளிமண்டலத்தை அவதானித்து இயற்கை அழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் கருவி ஒன்று பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்தப்படவிருப்பதாக விண்வெளி நிலையத்தின் ஐஎஸ்எஸ்-36 குழுவின் தலைவர் பவெல் வினொகிராதொவ் நேற்றுத் தெரிவித்துள்ளார்.


பன்னாட்டு விண்வெளி நிலையம்

இம்மாதம் 28 ஆம் நாள் சோயுஸ்-டிஎம்ஏ-08எம் ஏவூர்தியில் விண்வெளி நிலையத்தை நோக்கிப் பயணம் செய்யவிருக்கும் புதிய விண்வெளி வீரர்களே விண்வெளி நிலையத்தின் வெளிப் பகுதியில் இந்தக் கருவியைப் பொருத்துவார்கள் என வினொகிராதொவ் தெரிவித்தார்.


புவியின் வளிமண்டலத்தின் மேற்படலத்தின் இடம்பெறும் அயனிம (பிளாசுமா) மற்றும் அலைகளை ஆராயும் சிக்கலான உணர்கருவிகளையும் வானலைவாங்கிகளையும் இந்தச் சிறப்புக் கருவி கொண்டிருக்கும். இதன் மூலம் நிலநடுக்கங்கள், மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.


இந்த உருசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் புதிய ஆய்வுகூடப் பாகம் ஒன்று இவ்வாண்டு இறுதியில் விண்வெளி நிலையத்தில் பொருத்தப்படவிருக்கிறது.


மூலம்

[தொகு]

[[பகுப்பு:ரஷ்யா}}