உள்ளடக்கத்துக்குச் செல்

இறந்த விண்மீன்களை ஆய்வு செய்ததன் மூலம் நமது சூரியனின் எதிர்காலம் கணிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 10, 2013

இறந்த விண்மீன்கள் இரண்டை ஆராய்ந்த அறிவியலாளர்கள், நமது சூரியக் குடும்பம் சில பில்லியன் ஆண்டுகளின் பின்னர் எவ்வாறு காணப்படும் என்பதைக் கணித்துள்ளனர்.


சூரியனின் அணுக்கரு எரிபொருள் குறையும் போது அது வெளிப்பக்கமாக விரிவடைந்து, பின்னர் ஒரு காலத்தில் அதன் வெளிப் படலங்கள் வெடித்துச் சிதறும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதன் போது சூரியனுக்குக் கிட்டவாக உள்ள சில கோள்கள் சூரியனால் உள்வாங்கப்படும் எனவும், அவற்றில் இருந்து asteroids எனப்படும் சிறுகோள்கள் அவற்றின் சுற்றுவட்டத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.


கேம்பிரிட்ச்சுப் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பூமியில் இருந்து 150 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள டாரசு விண்மீன் குழுமத்தில் காணப்படும் இரண்டு இறந்த விண்மீன்களை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் மூலம் இவர்கள் ஆராய்ந்துள்ளனர். இவ்வகையான விண்மீன்கள் வெண் குறுமீன்கள் என அழைக்கப்படுகின்றன.


அத்துடன் நமது பால் வழி விண்மீன் பேரடையில் கோள்களின் நிலை குறித்து மேலும் தகவல்களை இவ்வாய்வு மூலம் பெறக்கூடியதாக இருந்ததாக வானியலாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த முடிவுகள் ராயல் வானியல் கழகத்தின் மாதாந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]

[[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]