உள்ளடக்கத்துக்குச் செல்

உலகின் மிகப் பெரிய எரிமலை பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 9, 2013

பசிபிக் பெருங்கடலின் அடியில் உலகின் மிகப் பெரும் எரிமலை ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


தாமு மாசிப் எரிமலையின் அமைவிடம்

310,000 சதுரகிமீ (119,000 சதுரமைல்) பரப்பளவுள்ள தாமு மாசிஃப் (Tamu Massif) என்ற இம்மலை சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப் பெரும் எரிமலையான செவ்வாய்க் கோளில் உள்ள ஒலிம்பஸ் மொன்ஸ் மலையின் அளவை ஒத்ததாக உள்ளது. இது பற்றிய தகவல்கள் நேச்சர் ஜியோசயன்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.


சப்பானின் கிழக்கே 1,600 கிமீ தூரத்தில் ஷாட்ஸ்கி ரைஸ் என்ற கடலுக்கடியில் உள்ள தீபகற்பத்தில் கடலுக்கடியில் 2 கிமீ தூரத்தில் தாமு மாசிப் அமைந்துள்ளது. இது ஹவாயில் உள்ள மோனா லோவா எரிமலையை விடப் பெரியதாகும்.


தாமு மாசிப் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் வாழ்வுக் காலத்தில் இது எப்போதும் கடல் மட்டத்துக்கு மேல் வந்ததில்லை என அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக அறிவியலாளர் வில்லியம் சேஜர் கூறுகிறார். அத்துடன் எதிர்காலத்திலும் இவ்வெரிமலை வெடிக்கும் என அறிவியலாளர்கள் நம்பவில்லை.


கிரீத்தேசியக் காலத்தில் (145-65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பெருங்கடல் பீடபூமிகள் பல உருவாகின. ஆனாலும் இவற்றை நாம் இப்போது காண முடிவதில்லை. இது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும்," என வில்லியம் சேஜர் கூறினார்.


மூலம்

[தொகு]