உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரனில் இறங்கி ஆய்வு நடத்த விண்ணுலவி ஒன்றை சீனா ஏவியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 2, 2013

சீனா தனது முதலாவது விண்ணுளவியை நிலவை நோக்கி ஏவியுள்ளது.


சான்'எ-3 (Chang'e-3) என அழைக்கப்படும் இவ்விண்கலம் இன்று திங்கட்கிழமை காலை 01:30 மணிக்கு நிலவை நோக்கிச் சென்றது. சந்திரனில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் விண்ணுளவிக்கு 'ஜேட் ராபிட்' (Jade Rabbit) அல்லது 'யுட்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 120 கிகி எடையுள்ளது.


இம்மாதம் நடுப்பகுதியளவில் இது சந்திரனின் வடக்கு அரைக்கோளத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் நிலவில் உலவவிருக்கும் இந்த விண்ணுளவி 30 பாகை சாய்வான தளத்திலும் செல்லக்கூடியதாக இருக்கும்.


ஜேட் ராபிட் என்ற பெயர் சீனப் புராணக் கதைகளில் வரும் நிலாக் கடவுளான சான்'எ இன் செல்லப் பிராணியாக இருந்த ஒரு முயலைப் பற்றியதாகும். இணையத்தில் 3.4 மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.


விண்ணுளவியும் அது தரையிறங்க உதவும் விண்கலமும் சூரிய மின்கலன்களின் ஆற்றலினால் இயக்கப்படும். ஆனாலும் குளிர் இரவுகளில் விண்ணுளவியை சூடாக வைத்திருக்க புளுட்டோனியம்-238 கலந்த கதிரியக்க சூடாக்கிகளும் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]