எகிப்தின் முசுலிம் சகோதரத்துவம் தீவிரவாதக் கட்சியாக அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 26, 2013

எகிப்தின் முசுலிம் சகோதரத்துவக் கட்சியை ஒரு தீவிரவாத அமைப்பாக அந்நாட்டின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. இவ்வார ஆரம்பத்தில் காவல்துறைத் தலைமையகம் ஒன்று தாக்கப்பட்டமைக்கு இக்கட்சி பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டனர்.


முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகம்மது மோர்சி சென்ற ஆண்டு நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும், ஓராண்டின் பின்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். கட்சியும் தடை செய்யப்பட்டது.


நேற்றைய அறிவிப்பு இந்த அமைப்புக்கு எதிரான ஒடுக்குமுறையை மேலும் தீவிரப்படுத்த இராணுவத்தினருக்கு சுதந்திரம் வழங்குவதாக பிரதிப் பிரதமர் ஒசாம் எய்சா தெரிவித்தார். 1998 இல் தீவிரவாதத்துக்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஏனைய அரபு நாடுகளுக்கு தமது முடிவு அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.


காவல்துறைத் தலைமையகம் மீதான தாக்குதலுக்குத் தாம் பொறுப்பல்ல என சகோதரத்துவக் கட்சி அறிவித்திருந்தது. அதே வேளையில், சினாயைத் தளமாகக் கொண்டியங்கும் அன்சார் பைத்அல் மக்தில் என்ற அல்-கைதா ஆதரவு ஆயுதக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது


மூலம்[தொகு]