உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் சத்தீசுகரில் மாவோயிசவாதிகளின் தாக்குதலில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
சத்தீஸ்கரில் இருந்து ஏனைய செய்திகள்
இந்தியாவில் சத்தீஸ்கரின் அமைவிடம்

சத்தீஸ்கரின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

செவ்வாய், மார்ச்சு 11, 2014

இந்தியாவின் சத்தீசுக்கர் மாநிலத்தில் மாவோயிசத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மேலும் 25 காவல்துறையினர் காயமடைந்தனர்.


சுக்மா மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. போராளிகளுக்கு சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.


நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிசத் தீவிரவாதிகள் கிராமப்புற ஏழை மக்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அவர்களின் மேம்பாட்டுக்காகப் போராடுவதாகக் கூறுகிறார்கள்.


மாவோயிசத் தீவிரவாதம் 1960களின் பிற்பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆரம்பமானது. இது தற்போது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


மூலம்

[தொகு]