10,000 விண்மீன் பேரடைகளைக் கொண்ட விண்வெளியின் அதிசய புகைப்படத்தை நாசா வெளியிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 5, 2014

ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அகிலத்தின் வண்ணமயமான அதிர்ச்சி தரும் அகல்பரப்பு படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சாதாரண மனிதனால் காணமுடியாத புற ஊதாக்கதிர்கள் அடங்கிய அகிலமாக இது தெரிகிறது. 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


ஹபிள் மீ-ஆழ் புலம்

ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி அனுப்பியுள்ள புகைப்படத்தின் அண்டக் கதிர்களின் இளம் நீல பிரகாசமான தோற்றத்தின் மூலம் அண்டவெளியின் வயது ஐந்து முதல் பத்து பில்லியன் ஆண்டுகளில் நீண்டிருக்கலாம் என்று ஊகிக்க வைக்கிறது.


புகைப்படத்தைப் 841 வட்ட பாதையில் இருந்து தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது 10,000 வண்ண விண்மீன் பேரடைகளுக்கு (galaxy) மேல் காணப்படுகிறது. இந்த நிகழ்வு பெரு வெடிப்புக் கோட்பாட்டின் படி நூறு மில்லியன் ஆண்டுகளில் மீண்டும் விரிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]