நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 12, 2015

ஏப்பிரல் 25இல் 7.9 ரிக்டர் அளவு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்கு பின் மீண்டும் செவ்வாய் கிழமை அன்று 7.3 ரிக்டர் அளவு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பீகாரில் 16 பேர் இறந்தனர்.ஏப்பிரல் 25 நிலநடுக்கத்தில் 58 பேர் பீகாரில் இறந்தனர். இப்போதைய நிலநடுக்கத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்தார், திபெத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


இப்போது ஏற்பட்ட நிலநடுகத்தின் பாதிப்பு பெருமளவில் இந்தியாவின் பீகார் மாநிலத்திலேயே நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 21 பேர் இறந்ததாக 16.40 மணியளவு வரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்ற என்று புதுதில்லியில் உள்ள நேபாள தூதரகம் தெரிவித்தது.


ஏப்பிரல் 25 ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,000 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய நிலநடுக்கம் நேபாள நேரம் 12.35 மணிக்கு காத்மாண்டுவில் இருந்து வடகிழக்கே சுமார் 70 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தாகவும் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் இந்திய நிலவியல் துறை தெரிவிக்கிறது.நிலநடுக்கம் மையம் கொண்ட இடத்திற்கு அருகில் உள்ள நகரம் நமச்சே பசார். இந்நிலநடுக்கம் காத்மாண்டுவில் இருந்து எவரெசுட் சிகரத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்டது. ஏப்பிரல் 25 நிலநடுக்கம் காத்மாண்டுவிற்கு வடமேற்கே ஏற்பட்டது.


ஐக்கிய அமெரிக்க நிலவியல் துறை 15 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறுகிறது.


இந்த 7.3 அளவு நிலநடுக்கத்திற்கு பின் இதன் பக்க விளைவாக ரிக்கட் அளவில் 6.2, 5.4 & 4.8 என்ற மூன்று பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.


இந்நிலநடுக்கம் புதுதில்லி முதல் சென்னை வரை உணரப்பட்டது. ஆனால் அங்கு பாதிப்பு ஏதும் இல்லை. நிலநடுக்க செய்தியை அடுத்து புதுதில்லி மெட்ரோ இரயில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கியது, தலைமைச்செயலகம் உட்பட பல அரசு அலுவலகங்களின் அலுவலர்கள் வெளியேற்றப்பட்டனர்.



மூலம்[தொகு]