உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேசில் சிறைக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 2, 2017

பிரேசில்நாட்டின் அமேசானா மாநிலத்தின் சிறைக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இக்கலவரம் திங்கட்கிழமை ஆயுதமற்ற 12 சிறைக் காவலர்களை கைதிகள் ஒப்படைத்ததும் முடிவுக்கு வந்தது.


இரு போதை கடத்தல் குழுக்கள் சிறையில் மோதிக்கொண்டதால் இக்கலவரம் மூண்டதாக சிறை அதிகாரி கூறினார். பல கைதிகள் தப்பிச்சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கலவரம் தொடங்கிய உடன் தலைகளற்ற ஆறு உடல்கள் சிறைக்கு வெளியில் தூக்கி விசப்பட்டது.


இச்சிறை 454 கைதிகளை அடைக்கும் அளவுக்கு கட்டப்பட்டது, அக்டோபர் மாதம் கிடைத்த தகவலின் படி 585 கைதிகள் இதிலிருந்தனர். அமேசேனா மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய சிறைக்கலவரம் இது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மூலம்

[தொகு]