உள்ளடக்கத்துக்குச் செல்

சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 4, 2016

சிகா தீநுண்மம் தென் அமெரிக்க கண்டத்தில் அதிகளவில் பரவியுள்ளது. குறிப்பாக பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிகா தீநுண்மம் மூலம் உருவாகும் காய்ச்சல் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. டெங்கு, மஞ்சள் காய்ச்சல் ஆகியவற்றை பரப்பும் கொசுக்கள் மூலமே சிகாவும் பரவுகிறது.


முதன் முறையாக ஐக்கிய அமெரிக்காவில் டெக்ச்சு மாதிலத்தில் உள்ள ஒருவருக்கு உடலுறவு மூலம் இக்காய்ச்சல் பரவியுள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்தில் கொசுத்தொல்லைகள் இல்லை. பாதிக்கப்பட்டவர் சிகா பாதித்த நாடுகளுக்கு சென்றதில்லை. ஆனால் அவர் சிகா பாதிப்புள்ள வெனிசுலா நாட்டுக்கு சென்று வந்தவருடன் உடலுறவு வைத்துள்ளார்.


இதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தலை சிறியதாகவும் மூளை வளர்ச்சி குன்றியும் காணப்படுகிறது.


சிகா காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு உகாண்டாவில் இத்தீநுண்மம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேசிலில் அதிகரித்துள்ள சிகா காய்ச்சலால் ஆகத்து மாதம் ரியோ டி செனிரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் குறித்து கவலைகள் தோன்றியுள்ளது.

மூலம்

[தொகு]