உள்ளடக்கத்துக்குச் செல்

பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 20, 2024

பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார் . இவர் இசுடேண்டர் ஆயில் நிறுவன தலைவர் இச்சான் டி ராக்பெல்லரின் பேரன். இசுடேண்டர் ஆயில் அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மின் எக்சான் செவ்ரான் என பல எண்ணெய் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது.

தேவீது (டேவிட்) ராக்பெல்லர்

இவர் இச்சான் டி ராக்பெல்லர் இளையவரின் ஐந்து மகன்களில் இளையவர். இவரின் மற்ற இரு அண்ணன்கள் நியுயார்க் ( நெல்சன் ராக்பெல்லர்) & ஆர்க்கென்சாசு (வின்திராப் ராக்பெல்லர்) மாநில ஆளுநர்களாக பதவி வகித்தனர். நெல்சன் ராக்பெல்லர் போர்டு அதிபராக இருந்தபோது துணை அதிபராக பதவி வகித்தார்.


தேவீது ராக்பெல்லர்ஆ 1936இல் ஆர்வர்டில் பட்டம் பெற்றார் 1940இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப்போருக்கு பின் சேசு வங்கியில் தலைவராக இருந்தார். இது பின்பு சேபி மார்கன் சேசு என்று மாறியது.


நியு யார்க்கில் உலக வர்த்தக கட்டடம் வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1981ஆம் ஆண்டு வணிகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.


இவர் தன்னூடைய வள்ளல் தன்மைக்காக அறியப்படுகிறார். தன் 100வது பிறந்த நாளின் போது மெய்ன் மாநில அரசுக்கு தேசிய பூங்காவை ஒட்டியுள்ள தன் 1000 ஏக்கர் நிலத்தை அளித்தார். இவரிடம் உள்ள கலைப் படைப்புகளின் மதிப்பு 500 மில்லியன் டாலர் இருக்கும். நவீன கலை காட்சியகத்திற்கு 100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார்.


இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் இவர் மனைவி மார்கரெட்1996ஆம் ஆண்டு இறந்தார்.



மூலம்

[தொகு]