உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து மே தினக் கூட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

புதன், மே 2, 2012

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையின் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மே தினத்தைக் கொண்டாடியது. மே தின ஊர்வலம் பிற்பகல் 2 மணியளவில் நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியிலிருந்து ஆரம்பமாகியது. இந்த ஊர்வலத்தில் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்படப் பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம், குருநகர் பொதுநூலக மைதானத்தில் நிறைவடைந்தது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளின் தேசிய மே தின கூட்டம் குருநகர் சென்றோக்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.


நாட்டின் தென் பகுதியிருந்து பெரும்தொகையான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தில் இணக்கம் கண்டனர்.


அமைச்சர் டக்ளசு தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியின் மே தின ஊர்வலமும் மூன்று இடங்களில் இருந்து தொடங்கியது. தேவானந்தா உட்பட அக்கட்சியின் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவா் ஆலய முன்றலில் இடம்பெற்றது.


மூலம்

[தொகு]