உலகக்கிண்ணத்துக்கு ஆருடம் கூறிய ஆக்டோபசு பால் இறந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 29, 2010

2010 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் செருமனி அணி விளையாடிய ஏழு போட்டிகளின் முடிவுகளையும், இறுதிப் போட்டி முடிவையும் சரியாகக் கணித்து உலகை வியப்பில் ஆழ்த்திய பால் ஆக்டோபசு, என்ற சாக்குக்கணவாய் செவ்வாய்க்கிழமையன்று செருமனியில் காலமானது.


ஆக்டோபசு பால் 2010 உலகக்கிணப் போட்டியில் வெற்றி பெறும் அணியத் தெரிவு செய்கிறது

தென்னாப்பிரிக்காவில் இவ்வாண்டு நிகழ்ந்த கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகளில் செருமனியின் ஓபர்ஹாசன் என்ற இடத்தில் உள்ள மீன் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த சாக்குக்கணவாய் சரியான வெற்றியாளர்களை அடையாளம் காட்டியது. இரண்டு கண்ணாடித் தாங்கிகளில் ஒன்றை இது தெரிந்தெடுக்க வேண்டும். இரண்டு பெட்டிகளிலும் உணவுப் பொருட்கள் நிறைந்திருந்தன. இறுதிப் போட்டியில் வென்றஸ்பெயின் அணியை அது சரியாகக் கணித்தது.


பால் இறந்தது குறித்து அந்தக் காட்சியகத்தின் அறிக்கையில், "பாலின் இயற்கை மரணத்தை உலகுக்கு கவலையுடன் அறிவிக்கிறோம். நாங்கள் அனைவரும் பால் மீது மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் இருந்தோம். பாலின் மறைவு எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


மூலம்[தொகு]